‘புரோஜெக்ட் கர்மா’ தொடர் நடிகர்கள் & குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

45

கோலாலம்பூர், செப்.9 –

புரோஜெக்ட் கர்மா தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலை இங்கு காண்போம்.

மிட்சல் ஆர் சந்திரன்,இயக்குநர்

  1. புரோஜெக்ட் கர்மா தொடரை இயக்குவதற்க்கான உங்களின் உத்வேகம் என்ன?

ஒரு திரைப்பட இயக்குநராக எனது எண்ணம் கதைகளைச் சொல்வதுதான். நான் பார்த்தக், கேட்டப், படித்த, அனுபவித்த மலேசியக் கதைகளால் புரோஜெக்ட் கர்மா ஈர்க்கப்பட்டது. இந்தக் கதைகளை வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் காட்சிப்படுத்த விரும்பினேன். மேலும் எனதுச் சகப் படைப்பாளியான மார்ட்டின் மற்றும் இயக்குநர் குழுவானக் குமரவர்மன் மற்றும் தினேஷ் கோவிந்த் ஆகியோருடனானக் கலந்துரையாடலுக்குப் பிறகுப், புரோஜெக்ட் கர்மா உதயமானது.

  • புரோஜெக்ட் கர்மா தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகள் யாவை?

ஒரு பூங்காவில் நடந்துக் கொண்டே முக்கியக் கதாப்பாத்திரங்கள் உரையாடும் அத்தியாயம் 2-இல் சித்திரிக்கப்பட்ட ஒரு காட்சியை நான் கூறுவேன். படப்பிடிப்பிற்கு முன் பலச் சவால்களை எதிர்கொண்டதால் இந்தக் காட்சியைப் படமாக்கிய நாள் மிகவும் முக்கியமானது. இரவு நேரப் படப்பிடிப்பிற்க்குச் சுமார் நான்கு மணிநேரம் தேவைப்பட்டாலும் எங்களிடம் மூன்று மணி நேரம் மட்டுமே இருந்ததால் நேரமின்மைக் காரணமாக இந்தக் காட்சி எங்களின் மன உறுதியை மிகவும் சோதித்தது. நாங்கள் படப்பிடிப்பிற்குத் தயாராகிக்கொண்டிருந்தப்போது மழை பெய்யத் தொடங்கியது. இயற்கையின் சோதனை என்னை மேலும் பயமுறுத்தியது மற்றும் நான் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினேன். இருப்பினும் எனதுக் குழுவினர், பழம்பெரும் இந்திய நடிகரான எம்ஜிஆரின் பாடல்களால் என்னை உற்சாகப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மழை நின்றவுடன், ஒப்பனைக் கலைஞர் முதல் நடிகர்கள் வரை அனைவரும் விரைவாகச் செயல்பட்டனர், 15 நிமிடங்களில் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டனர். எனது நடிகர்களானப் பர்வீன் மற்றும் மார்ட்டின் ஆகியோருக்கு இன்னும் இரண்டு மணிநேரம் மட்டுமே உள்ளதையும் நேரப்பற்றாக்குறையைப் பற்றியும் விளக்கினேன். மேலும் இந்தக் காட்சியைப் படப்பிடித்து முடிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் கோரினேன். எனது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இருவரும் ஒரே டேக்கில் முழு காட்சியையும் ஒரு மணி நேரத்திற்குள் செவ்வென நடித்து முடித்தனர். இதுப் போன்றத் திறமையான நடிகர்கள் மற்றும் அர்ப்பணிப்புமிக்க குழுவினருடன் இணைந்து பணியாற்ற முடிந்தது இந்தத் தொடரை இயக்குவதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்பதை உணர்ந்தேன். மக்கள் இந்தத் தொடரை விரும்பினால், எல்லாப் புகழும் எனக்கு மட்டும் அல்ல, அற்புதமானக் குழுவையும் சாரும்.

பர்வீன் நாயர் & மார்ட்டின் ஆர். சந்திரன், நடிகர்கள்:

  1. புரோஜெக்ட் கர்மா தொடரில் நீங்கள் நடித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.

பர்வீன்: புரோஜெக்ட் கர்மா தொடரில் நான் நடித்தக் கதாப்பாத்திரத்தின் பெயர் அருள். அருள் மிகவும் வலுவான மற்றும் பிடிவாதமான வழக்கறிஞர். அருளின் பண்புகள் எனது இளமைப் பருவத்தைப் பிரதிப்பலிக்கிறது. இதனால், நான் நடித்தக் கதாப்பாத்திரத்தின் சாரத்தை என்னால் எளிமையாக அறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு வழக்கறிஞராக எனதுக் கதாப்பாத்திரத்தைப் பொறுத்தவரை, எனது உத்வேகத்திற்கு வழக்கறிஞராக இருக்கும் என் மாமாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, நான் பார்த்த, அனுபவித்த மற்றும் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் எனதுக் கதாப்பாத்திரத்தின் கூறுகள் ஏற்கனவே நிறுவப்பட்டன. என்னுடையக் கதாப்பாத்திரத்தைச் செவ்வென நடித்துள்ளேன் என்று நம்புகிறேன்.

மார்ட்டின்: புரோஜெக்ட் கர்மா தொடரில் நான் ஆற்றியக் கதாப்பாத்திரம் என்னவென்றால் தனக்கு ஒதுக்கப்பட்ட நபர்களின் கர்மச் செயல்களைச் சமனிலைப்படுத்துவதற்காக மனித ரூபம் எடுக்கும் ‘கர்மா’. கர்மச் செயல்களின் அடிப்படையில் மக்களுக்கு உதவுவதா அல்லது தண்டிப்பதா என்பதைக் கர்மா முடிவுச் செய்கிறார். மக்களின் வாழ்வில் கர்மா ஒரு பங்கு வகிப்பதைச் சித்திரிப்பதால் இக்கதைக்கு ஒரு தனித்துவமான மற்றும் தனிப்பட்டப் பரிமாணத்தைச் சேர்க்கிறது. மற்றவர்களுக்கு நான் இளைக்கும் நல்லதும் கெட்டதும் நம்மிடம் திரும்பி வரும் என்பதால் என் வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சார்ந்த என் சொந்தக் கர்மாவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க என்னை இக்கதைத் தூண்டியது. கருணை, இரக்கம் மற்றும் நேர்மறை நடத்தை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது நேர்மறையானக் கர்மாவைச் சேர்ப்பதற்க்கும் மிகவும் இணக்கமான வாழ்க்கையை உருவாக்குவதற்கும் சிறந்த வழியாகும் என்பதை நான் இறுதியாகப் புரிந்துக்கொண்டேன்.

  • புரோஜெக்ட் கர்மா தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

பர்வீன்: நான் கிட்டத்தட்ட 12 வருடங்களாகக் கலைத்துறையில் இருக்கிறேன். ஒரு தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்தத் தொடர் மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும். முக்கியக் கதாப்பாத்திரத்தை வெளிக்கொணரச் சில மாற்றங்களும் திருப்பங்களும் தேவைப்பட்டன. மேலும் அருள் போன்ற வலுவானக் கதாப்பாத்திரத்தைச் சுமக்கும் பொறுப்பு கடினமாக இருந்தது. ஆனால் முழுச் செயல்முறையும் என்னை ஒரு சிறந்த நடிகராக மாற்றியது. ஒட்டுமொத்தக் குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொடர் வெற்றியடைந்திருக்க முடியாது. எனவே, இயக்குநர்கள், தயாரிப்பாளர், படக்குழுவினர், கலைப் பிரிவுக் குழுவினர், ஒப்பனைக் கலைஞர் ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றித் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். படப்பிடிப்பின் போது, ​​ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ அல்லது வெளிப்படையாகவோ உணர்ந்த ஒரு சில குறிப்பிட்ட கர்ம விஷயங்களால் நாங்கள் திகைத்துப் போனோம். எங்கள் அனைவருக்கும் இது ஓர் அதிசயமான அனுபவத்தைக் கொடுத்தது.

மார்ட்டின்: இதற்கு முன் பலப் படைப்புகளில் நான் நடித்திருந்தாலும் ஒரு தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. ஆனால் அவ்வனுபவங்கள் யாவும் இதற்கு என்னை தயார்படுத்தவில்லை. இந்தக் கதாப்பாத்திரத்தைத் திரையில் உயிர்ப்பிக்க நிறைய ஒழுக்கமும் தைரியமும் தேவைப்பட்டது. ஒரு நடிகராக இந்தப் பணியை மேற்கொள்வதற்காக நான் மிகவும் பயந்தேன். ஆனால் எனக்கு நம்பிக்கை ஊட்டிய இயக்குநர் குழுவினரான மிட்செல், குமரவர்மன் மற்றும் தினேஷ் கோவிந்த் ஆகியோர் எனது பயத்தைப் போக்க உதவியது மட்டுமல்லாமல், என்னுள் இருந்த சிறந்த நடிகரை வெளிக்கொணர்தனர். எனது நடிப்பிற்காக நான் பெறும் ஒவ்வொரு பாராட்டும் அவர்களுக்கே உரியதாக இருக்க வேண்டுமே தவிர எனக்கு அல்ல. அவர்களின் கடின உழைப்பும், முயற்சியும், தொலைநோக்குச் சிந்தனையும், செயல்திறனும் தான் இத்தொடரைத் திரையில் உயிர்ப்பித்தது. என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். படப்பிடிப்பின் முழு செயல்முறையின் போது நான் பர்வீன் நாயர் உட்படச் சக நடிகர்களிடம் கற்றுக்கொண்டதோடு அவர்களை நம்பியும் இருந்தேன்.

மார்ட்டின் ஆர். சந்திரன், நடிகர்:

  1. இயக்குநராக இருந்த நீங்கள் நடிகராகியப் போது உங்களின் அம்மாற்றம் எவ்வாறு இருந்தது மற்றும் புரோஜெக்ட் கர்மா தொடரில் நடித்தப் போது நீங்கள் எதிர்கொண்டச் சில சவால்கள் யாவை?

ஓர் இயக்குநராக இருந்த நான் நடிகராக மாறிய அந்தத் தருணம் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஏனெனில் முதல் முறையாக என்னைக் கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் மீது எனக்கு முழுமையானக் கட்டுப்பாடு இல்லை. ஆரம்பத்தில், படப்பிடிப்பின் போது எனது “இயக்குநர் மூளை” தீவிரமாகச் செயலாற்றியதால் பல விஷயங்களைப் பரிந்துரைக்கத் தூண்டியது. எனவே இயக்குநர் என்ற முறையில் என்னுள் தோன்றிய ஆலோசனைகளைக் கட்டுப்படுத்த சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால் நான் இயக்குநராக இருந்திருப்பதால் அதன் கஷ்டங்களும் ஒரு நடிகர் என்னச் செய்ய வேண்டும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஒரு நடிகர் இயக்குநரின் மீது குருட்டு நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நடிகர் என்றால் இயக்குநர் கையில் இருக்கும் பொம்மையைத் தவிர வேறேதுமில்லை. இயக்குநர் மற்றும் அவரது குழுவினரின் திறன்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்ததால், எனது எண்ணங்களை அமைதிப்படுத்தி கதாப்பாத்திரத்தில் ஆழமாக உள்வாங்கிச் செயல்பட்டேன். இறுதி தயாரிப்பைப் பார்த்தப்போது, ​​இயக்குநரின் செயல்முறையில் நான் தலையிடாமல் இருந்து நல்லது என்பதை உணர்ந்தேன். ஏனென்றால் தங்களுக்கு எப்படிப்பட்டப் படைப்பு வேண்டும் என்பதைக் குழுவினர் நன்கு அறிந்திருந்தனர். மேலும் செயல்படுத்தல் சரியாக இருந்தது. ஆனால் எனது “இயக்குநர் மூளையினால்” சில நன்மைகளும் இருந்தன. ஏனெனில் பெரும்பாலானச் சூழ்நிலைகளில் இயக்குநர் என்ன விரும்புகிறார் என்பதை என்னால் சரியாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. மேலும் இயக்குநரின் எதிர்ப்பார்ப்பை உயிர்ப்பிக்க எனது நடிகர்கள் குழுவிற்கு நான் அடிக்கடி உதவினேன். சுருக்கமாகக் கூறினால், இது ஒரு சிறந்த அனுபவம். என்னை ஒரு சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் இத்தொடர் மாற்றியது என்று நான் நம்புகிறேன்.