12 ஆவது மலேசிய திட்டத்தில் மித்ரா ஊக்குவிக்கப்படும்! அமைச்சர் சிவகுமார் வரவேற்பு

21

கோலாலம்பூர் செப் 11-
12 ஆவது மலேசிய திட்டத்தில் மித்ரா ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பதை மனித வள அமைச்சர் வ சிவகுமார் பெரிதும் வரவேற்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

12 ஆவது மலேசிய திட்டத்தில் அனைத்து இன மக்களும் நன்மை அடைவார்கள் என்பதோடு மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்ற திட்டமும் ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட மித்ரா மூலம் சமுதாயம் மேன்மேலும் நன்மை அடைய வேண்டும் என்ற இலக்கில் மித்ராவை ஊக்குவிக்கும் பிரதமரின் அறிவிப்பு அமைந்துள்ளது என்று அமைச்சர் விவரித்தார்.