ஜோசுவா மைக்கலின் உள்ளூர் தமிழ் தொடர் ‘படப்’ ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்பு காண்கிறது

132

கோலாலம்பூர், நவ.10-

சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பாளர், ஜோசுவா மைக்கல் எழுதி, இயக்கித், தயாரித்து மற்றும் நடித்தப் படப் எனும் முதல் உள்ளூர் தமிழ் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

நவம்பர் 13, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இத்தொடர் முதல் ஒளிபரப்பு காண்கிறது.

இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடரில் ஜோசுவா மைக்கல், அகல்யா மணியம், இளன்மதி இளங்கோவன், ஈஸ்வரன் என்கே, வனிஷா ரமேஸ், லோகநாதன் மற்றும் பல பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். கடன் தந்தவரிடம் பேபிமா பேக்கரியை இழந்த பிறகு அதை மீண்டும் பெற முயற்சிக்கும் ஜோசுவா மற்றும் அவரதுக் குழுவினரைப் படப் தொடரின் சுவாரஸியமான கதை சித்தரிக்கின்றது. ஜோசுவா இந்தியாவிலுள்ள சென்னைக்குப் புறப்பட்டு கடன் தந்தவரின் மகளிடம் இருந்து பேக்கரியை மீட்பதற்காக, அவளைக் கடத்தி, அவளது தந்தையை மிரட்டுவதே கதையின் மையக்கருவாக அமைகிறது.

மேலும், ஸ்போட்டிபை (Spotify), ஏப்பல் (Apple), யூடியூப் (YouTube), டீசர் (Deezer) மற்றும் பலவற்றில் இந்த 19-அத்தியாய நகைச்சுவை நாடகத் தொடரில் இடம்பெற்றுள்ள 13 அசல் பாடல்களை மலேசியர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். படப்-இல் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மியூசிக் கிச்சன் எனப்படும் திறமையான உள்நாட்டு இசைத் தயாரிப்பாளர்களான சித் மற்றும் பிரேம் ஆகியோரால் இயற்றப்பட்டன.

படப் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். அனைத்து மலேசியர்களும் படப்-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாயங்களைச் சூகாவில் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.