பெட்டாலிங் ஜெயா, நவ.22-
தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்திற்கு 2024 2ஆம் காலாண்டிற்குள் தீர்வு காண சுகாதார அமைச்சு இலக்குக் கொண்டுள்ளதாக அமைச்சர், டாக்டர் ஸாலேஹா முஸ்தபா தெரிவித்தார்.
“இந்த நெருக்குதல்மிக்க விவகாரத்தை விவாதிக்கும் பொருட்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தரப்புகள், இதர அமைச்சுகளும் அடங்கிய உயர்மட்டச் செயற்குழு ஒன்று இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்டது.”
இதில் மருத்துவத்திற்கானக் கண்காணிப்பு அமைப்பாக இருக்கும் மலேசிய மருத்துவ மன்றமும் (எம்.எம்.சி) இடம் பெற்றிருந்தது.
அதனால் இப்பிரச்சனைக்கு அடுத்தாண்டு மத்தியில் தீர்வு காணப்பட்டு விடும் என்று அமைச்சு எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர்களுக்கு அளித்தச் சிறப்பு பேட்டியில் செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டார்.