டத்தோஸ்ரீ சரவணன் கிண்ண புட்சால் போட்டி: சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு ஏற்பாடு

287

கோலாலம்பூர், ஜன.3-


சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு டத்தோஸ்ரீ சரவணன் கிண்ண புட்சால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சுந்தரம் குப்புசாமி தெரிவித்தார்.

இப்போட்டி அடுத்த மாதம் 4ஆம் தேதி காலை 8.08 மணிக்கு அம்பாங் விளையாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முன்கூட்டியே பதிவு செய்யும் 64 குழுக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கு ஒரு குழுவிற்கு 150 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பம் கொண்ட குழுக்கள் பதிவு செய்ய அவற்றின் கட்டண ரசீதையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இதில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவிற்கு 3,000 வெள்ளி ரொக்கம், வெற்றிக் கேடயம், தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்; 2ஆவதாக வெல்லும் குழுவிற்கு 2,000 வெள்ளி ரொக்கம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்; 3ஆவதாக வெல்லும் குழுவிற்கு 1,000 வெள்ளி ரொக்கம், வெண்கலப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்; 4ஆவது குழுவிற்கு 500 வெள்ளி ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் குழுக்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்போட்டி குறித்த மேல் விவரங்களுக்கு 011-26274318 (முருகன்), 012-9502716 (குணா), 010-2888846 (ஜெகன்), 012-6900773 (மதன்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என்று சுந்தரம் குறிப்பிட்டார்.