சீனப் புத்தாண்டு மலேசியர்களுக்கான ஒரு முக்கிய கொண்டாட்டம்! -என்றி லாய்

66

கோலாலம்பூர், பிப்.6-

  சீனப் புத்தாண்டு என்பது இனம் அல்லது வாழ்க்கைப் பின்னணியைப் பாராமல் மலேசியர்களுக்கான ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்று வங்சா மாஜு பி.கே.ஆர். தொகுதி தலைவர் என்றி லாய் தெரிவித்தார்.

சீனர்களுக்கு இது அர்த்தமுள்ள மற்றும் முதன்மையான கொண்டாட்டமாகும். இது இதர சமூகத்தினருக்கும் விடுமுறை மகிழ்ச்சியை வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

மலாயாவுக்கு தொடக்கத்தில் வந்த சீனர்கள் பண்பாடு, கலாச்சாரம், தாய்மொழி, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். இந்த சவால்களுக்கு மத்தியில் சீனர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், காரணம் தங்களின் உறுதிப்பாடு மற்றும் தீர்மானத்தால் தனித்துவமான அடையாளத்தை அவர்கள் இன்னும் நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தலைநகரில் சீனர்கள் தொடக்கக்கட்டத்தில் குடியிருந்த இடங்களில் ஸ்தாப்பாக், வங்சா மாஜு ஆகியவையும் அடங்கும்.

டேசா ஸ்தாப்பாக்கிலிருந்து ஸ்தாப்பாக் கார்டன் வரை, தெராத்தாய் மேவாவிலிருந்து கெந்திங் கிள்ளான் வரை, ஜாலான் கோம்பாக் 5ஆவது மைலிலிருந்து கம்போங் லீ கோங் சியான் (5ஆவது மைல்) ஆகிய பகுதிகளில் சீனர்களின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாடு அங்கு வசிக்கும் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கை முறையாகி  விட்டது. இதில் சீனர்கள் வந்த முதல் நாளிலிருந்து இதர சமூகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன.

வழிபாட்டுத் தலம், சீனப்பள்ளி, சந்தை, பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை சீன சமூகத்தினரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகி விட்டன. வங்சா மாஜுவை எடுத்துக் கொண்டால் 3 தேசிய வகை மெண்டரின் பள்ளிகளும் ஒரு தேசிய இடைநிலைப்பள்ளியும் உள்ளன.

இந்த வேளையில் மலேசியர்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் கூட்டரசு பிரதேச பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றத்தின் உதவித் தலைவருமான என்றி லாய்.