துங்கு அப்துல் ரஹ்மான் உபகாரச் சம்பளம்: இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! -டத்தோ ஆரோன் அகோ டாகாங்

67

புத்ராஜெயா, பிப்.8-

துங்கு அப்துல் ரஹ்மான் உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு உயர்கல்வி மாணவர்கள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பொது அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் அல்லது மேற்கொண்டிருக்கும் அனைத்து மலேசியர்களும் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.

துங்கு அப்துல் ரஹ்மானின் 121ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்படும் இந்த உபகாரச் சம்பள வாய்ப்பு நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பதற்கு ஓர் அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உபகாரச் சம்பளம் வசதி குறைந்தவர்கள் உட்பட பல்வேறு வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

 இதில் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கை மதிப்பீட்டைத் தவிர சவால்களை எதிர்கொள்ள தலைமைத்துவம், திறன் அம்சங்கள் மட்டுமின்றி நாட்டிற்குப் பங்களிக்கும் ரீதியிலிருந்தும் மதிப்பீடு செய்யப்படும் என்று ஓர் அறிக்கையில் கனொவிட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆரோன் குறிப்பிட்டார். 

-அஸ்ட்ரோ அவானி