கருணைக் கரங்கள் கலாச்சார மையத்தை திறந்து வைத்தார் டாக்டர் குணராஜ்

89

கிள்ளான், பிப்.8-

கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கருணைக் கரங்கள் கலாச்சார மையத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் திறந்து வைத்தார்.

இந்த கருணைக் கரங்கள் கலாச்சார மையம் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இத்துறையில் சாதனைகளைப் படைப்பதற்குத் தகுந்த தளமாக விளங்கும்.

தங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வளங்கள், வாய்ப்புகளைத் தேடி கலைத் துறை வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்ற இவர்கள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்த இசைக் குழுவின் தலைவர் சுப்ரா மற்றும் மேரி தாஸ் ஆகியோருக்கு டாக்டர் குணராஜ் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.