நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது மலேசிய திரைப்பட துறை -டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்!

78

கோலாலம்பூர், மார்ச் 17-

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தொழில்நுட்பம் என மலேசிய திரைப்பட துறை தற்போது நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

தரமான ஒரு தயாரிப்பை மலேசிய திரைப்பட துறையினர் ரசிகர்களுக்காக வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் அடிப்படையில் “கதை சொல்லுங்க சார்” திரைப்படம் மக்களிடையே குறிப்பாக உள்நாட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது நிச்சயம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.  

திரைப்பட துறையில் உள்நாட்டு கலைஞர்கள் தற்போது தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. இவர்களின் படைப்புகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.