கோலாலம்பூர், மார்ச் 26-
வரும் புதிய தவணைக்கான ம.இ.கா.வின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணனும் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என்று ம.இ.கா. கோலாலம்பூர் டவுன் கிளை தனது பிளவுபடாத ஆதரவை வழங்கியது.
இவ்விரு தலைவர்களும் தத்தம் பதவியில் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு கூட்டரசு பிரதேச பண்டார் துன் ரசாக் தொகுதியின் கீழ் செயல்படும் ம.இ.கா. கோலாலம்பூர் டவுன் கிளை ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக அக்கிளையின் தலைவர் எண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ சரவணன் ஆகிய இருவரின் தலைமைத்துவத்தின் கீழ் ம.இ.கா. தற்போது மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் பொருட்டு கட்சி தொடர்ந்து வலுவுடனும் கம்பீரத் தோற்றத்துடனும் திகழ்வதற்கு இவ்விரு தலைவர்களின் தலைமைத்துவம் மிக முக்கியம் என்றார் எண்ட்ரூ டேவிட்.