‘மங்கை நீ தொடர்’ இயக்குநர் & நடிகர்களுடன் நேர்காணல்

64

கோலாலம்பூர், மார்ச் 26-

‘மங்கை நீ தொடர்’ இயக்குநர் மற்றும் நடிகர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.

யுவராஜ் கிருஷ்ணசாமி, இயக்குநர்:

1.   மங்கை நீ தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

பெண்களை மையமாகக் கொண்ட கதைகள், காட்சிகள் மூலம் சொல்லப்படும் போது பல கோணங்களில் மதிப்புகளைக் கொண்டுள்ளன. சவால்களைப் பெண்கள் கையாளும் விதம், அவர்கள் எவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறார்கள் மற்றும் மறைமுகமாகத் தார்மீக வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதைத் தற்போதைய காலத்தில், பெண்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விவாதம் பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. சவால்களைச் சமாளிப்பதற்குப் பெண்களின் கடின உழைப்பை ஒரு கதையின் மூலம் சொல்ல எண்ணியதே மங்கை நீ தொடர் உருவாக்கியதற்கான முக்கிய காரணம். சவால்களைச் சமாளிப்பதற்குப் பெண்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பை ஒரு கதையின் மூலம் சொல்ல எண்ணியதே மங்கை நீ தொடரை இயக்க என்னைத் தூண்டியது.

   சமூகத்தின் ஒரு பகுதியினரால் “பலவீனமானவர்கள்” என்று கருதப்படும் பெண்கள் எவ்வாறு தனக்கு ஆதரவாக நிற்கிறார்கள், அவர்களின் பண்புகள், மரியாதை, ஒழுக்கம், தனித்துவம் மற்றும் குடும்பங்கள், நாம் மேலும் வளரத் தூண்டிய தருணங்களை டத்தின் ஷைலாவும் நானும் சந்தித்ததால் அதுவும் மங்கை நீ தொடரை உருவாக்க எங்களை ஊக்குவித்தது.

2.   மங்கை நீ தொடரை இயக்கும் போது உங்களுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிந்ததில் எனக்குச் சிறந்த நினைவுகள் கிடைத்தன. முதன்முறையாக ஓர் ஆந்தாலஜியில் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனெனில், ஓர் இயக்குநராக 4 அல்லது 5 நாட்களில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு மாற வேண்டும். அந்த மாற்றம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய விஷயமாக இருந்தது. படப்பிடிப்பில் எனக்கு கிடைத்த பல நல்ல நினைவுகளில் ஒன்றை மட்டும் என்னால் குறிப்பிட முடியாது. மங்கை நீ தொடரில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும் தங்களின் முழு ஈடுபாட்டுடன் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தனர். மிக முக்கியமாக டத்தின் ஷைலா, எனது துணை இயக்குநர்கள், அருண், கபில் மற்றும் ஷர்மினி உள்ளிட்ட எனது படைப்பாற்றல் குழு இறுதிக் கட்டம் வரை தங்களின் சிறந்த உழைப்பை வழங்கினர்.

அத்தியாயம் 1: ஷாமினி ஷ்ரதா, கிஷோக் & யுவனா, நடிகர்கள்:

அத்தியாயம் 2: டிஷாலெனி ஜாக், தேவகுரு & அஹமு திருஞானம், நடிகர்கள்:

  1. மங்கை நீ தொடரில் நீங்கள் வகித்த கதாப்பாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா?

ஷாமினி: எனது கதாபாத்திரத்தின் பெயர் பூஜா. பூஜா மிகவும் தைரியமான, வலிமையான மற்றும் உறுதியான ஒரு பெண்.

கிஷோக்: இயக்குநர் எழுதிய கதாபாத்திரத்தின் கூறுகள் மிகவும் விரிவாக இருக்கவேச் சிறந்த நடிப்புத் திறன் தேவைப்பட்டாலும், அந்தக் கதாப்பாத்திரம் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான அங்கங்கள் நன்றாக இருந்தன என்றுதான் நான் கூறுவேன். உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நாம் சமநிலையில் ஈடுபட முனைவதால், இக்கதாபாத்திரத்தை நாம் அனைவரும் மிகவும் எளிமையாகத் தொடர்புப்படுத்த முடியும்.

யுவனா: மிகவும் தைரியமான, தீப்தி என்னுடைய கதாப்பாத்திரம். இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமையடைகிறேன்.

டிஷாலெனி: ‘யுத்தம்’ அத்தியாயத்தில் எண்ணற்ற மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் கண்மணியாக நான் நடித்தேன். தனக்குத் தெரிந்த ஒருவரால் ஏமாற்றப்படவே கண்மணியின் வாழ்க்கைக் கண்மூடித்தனமாக மாறியதோடு சவால்களுக்கு வித்திட்டது. துன்பங்கள் இருந்த போதிலும், கண்மணி தனது கடந்த காலத்தால் வரையறுக்கப்பட மறுக்கும் ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான தனிநபராக உருவாகிறார். கண்மணியின் அனுபவங்களுடன் என்னால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியா விட்டாலும் அவரது பயணமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமும் ஒரு நடிகையாகச் சித்தரிக்க நம்பமுடியாத அளவிற்கு வளமாக இருந்தது.

தேவகுரு: எனது கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபன். 17 வயதில் அவருக்குப் பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மசாஜ் செய்யும் தொழிலாளியாக வேலை பார்க்கும் பார்த்திபன் இயல்பிலேயே ஸ்கெட்ச் கலைஞராகவும், பார்வை குறைபாடு ஏற்பட்ட போதிலும் வரைவதைத் தொடர்கிறார். பின்னர், கபின் மற்றும் கண்மணியுடன் நட்பு கொள்கிறார். பார்த்திபன் திரையில் இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்த பார்வையற்றவரின் நடத்தை மற்றும் செய்கை மொழியைக் கற்க மலேசிய பார்வையற்றோருக்கான கழகத்திற்குச் செல்கிறார்.

அஹமு: ஷைலா வழங்கிய வாய்ப்பின் மூலம் இந்தத் தொடரில் நான் நடித்த ஏஎஸ்பி துர்கா கதாபாத்திரம் எனது கனவு மற்றும் முதல் காவல்துறை அதிகாரி கதாபாத்திரமாகும். ஏஎஸ்பி துர்கா ஓர் உறுதியான அதிகாரி, அவர் தனது செயல்களில் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் தனது கொள்கைகளில் உறுதியாக உள்ளார். இந்தக் கதாப்பாத்திரம் என் நிஜ வாழ்க்கைக் குணத்துடன் மிகவும் தொடர்புடையது.

2.   மங்கை நீ தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

ஷாமினி: இந்தப் பாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் நான் பிறரை மன்னிக்க வேண்டும், ஆனால், அதே நேரத்தில் வெறுப்புகளைக் கொண்டிருப்பதோடு மற்றவர்களை நான் பழிவாங்க சதி செய்யவும் வேண்டும். திருமண வாழ்க்கையைக் காப்பாற்றும் பொருட்டு கவனத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இந்தப் பாத்திரத்திற்கு இருந்தது.

கிஷோக்: ஷைபாவிஷனுடன் முதல் முறையாகப் பணிபுரிந்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாகும். நான் அத்தருணங்களை என்றும் போற்றுவேன்.

யுவனா: இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் படக் குழுவினர்களுடன் இணைந்து பணியாற்றியது நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. ஸ்கிரிப்ட் சற்று அழுத்தமாகவும் சவாலாகவும் இருந்தது. இயக்குநர் மற்றும் எனது சக நடிகர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்கு நான் கூற விரும்புகிறேன். இந்தத் தொடர் எனது நடிப்புத் திறனை உயர்த்தியது மட்டுமல்லாமல், ஒரு நபராக என்னை வளப்படுத்தியது என்று நம்புகிறேன். பெண்களின் வலிமை, மீட்டெழுச்சி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைச் சித்தரிக்கும் இந்தத் தொடர் என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. தங்கள் செயல்களாலும், வார்த்தைகளாலும் மற்றவர்களை ஊக்கப்படுத்தி, வலுவூட்டும் அனைத்துப் பெண்களுக்கும் இந்தத் தொடரைச் சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தத் தொடர் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டமைக்கு நன்றி.

டிஷாலெனி: மங்கை நீ தொடரில் குறிப்பாக கண்மணியாக நடித்தது எனக்கு ஓர் ஆழமான மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அத்தகைய சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரத்தை நடிக்க வாய்ப்பளித்ததற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். திறமையான சக கலைஞர்களுடன் இணைந்து இயக்குநர்/எழுத்தாளர் யுவராஜ் கிருஷ்ணசாமியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றியது உண்மையிலேயே பெருமைக்குரியது. படப்பிடிப்பு தளத்தில், குறிப்பாக முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பின் போது, ஒவ்வொரு கணமும் என்னுள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சில காட்சிகள் உணர்ச்சி ரீதியாகச் சவாலாக இருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் நான் வளர அனுமதித்தன. பார்வைக் குறைபாடுள்ள சமூகத்தைச் செவ்வென சித்தரிக்கத் தேவையான மற்றும் விரிவான பயிற்சி உதவியதோடு என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மங்கை நீ தொடரில் நடித்த எனது அனுபவம் எனது கலைப்பயணத்தில் ஒரு மைல்கல் என்றுதான் கூறுவேன்.

தேவகுரு: யுவராஜ் இயக்கத்தில் நடிப்பது, எனது இரண்டாவது முறை. என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைக்க முழு சுதந்திரம் கொடுத்து, படப்பிடிப்பு முழுவதும் என்னை வழிநடத்திய யுவராஜ் மிகவும் வேடிக்கையான மனிதர். தனது தயாரிப்பில் என்னை மீண்டும் நடிக்க வைத்ததற்காகவும், என் வாழ்நாளில் மறக்க முடியாத பாத்திரத்தை வழங்கியதற்காகவும் டத்தின்ஸ்ரீ ஷைலாவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

அஹமு: குற்றக் காட்சிகள் உட்பட பிற காட்சிகளில் நடித்தது ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. ஆனால், முழு அணியுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது. இந்த பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தமைக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன். இதில் பெற்ற நுண்ணறிவுகளை எதிர்கால படைப்புகளில் பயன்படுத்த ஆவலாக உள்ளேன்.