கோலாலம்பூர், மார்ச் 29-
அடுத்த 3 ஆண்டுகளுக்கு ம.இ.கா.வின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக கட்சியின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கட்சியைச் சீரிய முறையில் வழிநடத்தி வரும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மேன்மேலும் பல உயரிய விருதுகள் பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.
தனது தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை ஆற்றி வரும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து தமது பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்குக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குவர் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.