சமூகநல இல்லத்திற்கு உணவு பொருட்கள் அன்பளிப்பு: டத்தோ லோக பாலா வழங்கினார்

245

செமினி, மார்ச் 31-

மைபிபிபி இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோகபாலா மோகன் இங்குள்ள சித்தி நோர் அய்னி சமூகநல இல்லத்திற்கு நோன்பு துறப்புக்கான உணவு பொருட்களை அன்பளிப்பு செய்தார்.

நோன்பு காலத்தில் மட்டுமல்லாது இனி வரும் காலங்களிலும் முதியோர்கள் தங்கியிருக்கும் இந்த இல்லத்திற்குத் தேவையான உதவிகளை வழங்கவிருப்பதகவும் லோகபாலா தெரிவித்தார்.

இந்த இல்லம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து அதன் நிர்வாகத் தரப்பினரிடம் அவர் கலந்தாலோசனை நடத்தினார்.

இந்த இல்லத்தின் தோற்றுநர் டாக்டர் நொயில் ஆவார்.

நிகழ்ச்சியில் மைபிபிபி சிலாங்கூர் மாநில உதவித் தலைவர் டாக்டர் எம்.சுரேந்திரன், மைபிபிபி பாங்கி தொகுதித் தலைவர் குமார் மற்றும் இதர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த அன்பளிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த குமாருக்குக் கட்சி இடைக்கால தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உணவு பொருட்களை இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு வாய்ப்பளித்த இல்லத்தின் தோற்றுநர் சித்தி நோர் அய்னிக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.