ஸம்ரி வினோத் உட்பட நால்வர் மீது மைபிபிபி போலீஸ் புகார்!

164

கோலாலம்பூர், ஏப்.1-

இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஸம்ரி வினோத் உட்பட நால்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மைபிபிபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது.

மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் தலைமையில் இந்தப் புகார் செய்யப்பட்டது .

ஸம்ரி வினோத், செகு சந்திரா, கணேஸ்வரன் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது

நாட்டில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பிற சமயத்தைச் சிறுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு எதிராக போலீசில் புகார் செய்யும்படி விலாயா மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டில் அதன் தலைவர் சத்தியா சுதாகரனை டத்தோ லோக பாலா கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து சத்தியா சுதாகரன் தலைமையில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் நேற்றிரவு இப்போலீஸ் புகார் செய்யப்பட்டது.