ஸ்குவாஷ் போட்டியில் சிவசங்கரி சாதனை: பிரதமர் வாழ்த்து!

60

கோலாலம்பூர், ஏப்.2-

லண்டனில் நடைபெற்ற கில்லென் மார்க்கெட்ஸ் ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலிடம் வென்ற தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“இவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி வரும் காலத்தில் பல வெற்றிகளுக்கு வழி வகுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று நிதியமைச்சருமான அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

இதனிடையே, லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் வென்று சாதனை படைத்த சிவசங்கரிக்கு நாட்டு மக்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது இவர்களிடையே தேசப்பற்று உணர்வை அதிகரித்து விட்டதையே காட்டுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஆகக் கடைசியாக டத்தோ நிக்கோல் டேவிட் சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து உலக ஸ்குவாஷ் சங்கப் போட்டியில் இறுதிக் கட்டத்திற்குச் சென்ற முதல் மலேசியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சிவசங்கரி.