தெக்குன்: இந்திய வர்த்தகர்களுக்கு கூடுதலாக வெ.30 மில்லியன் கடனுதவி! டத்தோ ரமணன்

44

கோலாலம்பூர், ஏப்.3-

இந்திய தொழில்முனைவர்கள் பயனடையும் வகையில் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டத்திற்குக் (எஸ்.பி.யூ.எம்.ஐ.) கூடுதலாக 30 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு 60 மில்லியன் ஆகும். இது இதுவரை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மிகப் பெரிய தொகையாகும் என்று தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்திய தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது பல்வேறு தொழில்துறைகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தொழில்முனைவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

“வர்த்தக, சமூக, பொருளாதார தரத்தை உயர்த்தி கொள்ள இந்திய தொழில்முனைவர்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று எஸ்.பி.யூ.எம்.ஐ.யை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் பேசினார்.

-த ஸ்டார்