மீண்டும் பிரதமர் துறையின் கீழ் மித்ரா!

40

புத்ராஜெயா, ஏப்.3-

மலேசிய இந்திய பொருளாதார உருமாற்றப் பிரிவை (மித்ரா) மீண்டும் பிரதமர் துறையின் கீழ் வைப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இத்தகவலை ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஃபாமி பாட்சில் இன்று அறிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது என்று ஃபாமி குறிப்பிட்டார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா கடந்தாண்டு ஒற்றுமை துறையின் கீழ் வைக்கப்பட்டது. இதனை மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.