களத்தில் இறங்கி பொருட்களின் விலையை கண்காணிப்பீர்! -அமைச்சர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

43

புத்ராஜெயா, ஏப்ரல் 3-

சந்தையில் பொருட்களின் விலை மற்றும் தரத்தைக் கண்காணிப்பதற்கு அமைச்சர்கள் களமிறங்கி நீண்ட நேரம் செலவிட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்ததாக தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பாட்சில் தெரிவித்தார்.

சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் அதன் தரம் உட்பட சூழ்நிலையைக் கண்காணிக்க நேரடியாகக் களமிறங்குவதில் அமைச்சர்கள் நீண்ட நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இது உண்மையில் பிரதமர் இதற்கு முன்பு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெற்ற கருத்துகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர்கள் கூட்டத்தில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாமி இவ்வாறு பேசினார்.

-பெரித்தா ஹாரியான்