ரவாங், ஏப்.14-
இந்த சித்திரை புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் ஏற்றமும் வளமும் மேலோங்க வேண்டும் என்று மலேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்சிஸ் சிவா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நன்னாளில் ரவாங் தன்னிலை பயிற்சி மையத்தில் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்களை அன்பளிப்பு செய்த சரஸ்வதி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பிரான்சிஸ் சிவா தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த மையத்திலுள்ளவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி புரிய முன்வந்துள்ள சரஸ்வதி மற்றும் குடும்பத்தாருக்கு அனைவரின் சார்பில் பிரான்சிஸ் சிவா தமது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.