திட்டமிடப்படாத தண்ணீர் விநியோக தடை: பழைய குழாய்களே காரணம்! -சார்ல்ஸ் சந்தியாகோ

79

கோலாலம்பூர், ஏப்.15-

    நாடு முழுவதும் உள்ள பயனீட்டாளர்களுக்குத் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோக தடைக்கு குழாய் வடிவமைப்பின் கால அவகாசத்தைக் காட்டிலும் 50 ஆண்டுகள் வரை பழமையாய் இருப்பதும் முக்கிய காரணங்களில் அடங்கும் என்று தேசிய தண்ணீர் சேவை ஆணைய (ஸ்பான்) தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

   குழாய்கள் சேதமடைவதற்கு 70 விழுக்காடு வருமானமில்லாத தண்ணீர் காரணமாக இருக்கும் வேளையில், இன்னும் 25 விழுக்காடு தண்ணீர் திருட்டு மற்றும் மீட்டர் துல்லியமானதாக இல்லாததால் ஏற்படுவதாகும்.

  வருமானமில்லாத தண்ணீர் விகிதம் இவ்வாறு உயர்வாய் இருப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் மற்றும் பழைய குழாய்கள் சேதமடைந்திருப்பதுதான் காரணமாகும்.

  இம்மாதிரியான பழைய குழாய்களை மாற்றும் திட்டம் தண்ணீர் விநியோக ஆபரேட்டர்களால் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும்.

   அது அந்தந்த மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலதன செலவு திட்டத்தின் வாயிலாக அமல்படுத்தப்படும் என்று பெரித்தா ஹாரியானிடம் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.      

-பெரித்தா ஹாரியான்