கோலாலம்பூர், ஏப்.16-
கூட்டரசுப் பிரதேச மஇகா நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் மாநில கட்சிக்கு வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வரும் என தாம் நம்புவதாக மாநில தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.
கூட்டரசுப் பிரதேச மஇகா துணைத் தலைவராக பாலகுமாரன் தனது பணியை தொடர்கிறார்.
மாநில மஇகாவின் புதிய தலைமை செயலாளராக ஆர்டி சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தித்திவங்சா தொகுதி தலைவரான இவர் இதற்கு முன் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
மாநிலத்தின் துணை செயலாளராக கெம்போங் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது பணியை மீண்டும் தொடரவுள்ளார்.
செராஸ் தொகுதி தலைவர் நலேந்திரன் மாநிலத்தின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லெம்பா பந்தாய் தொகுதி துணைத் தலைவர் கணேசன் தகவல் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
அவர் தனது பணியை மீண்டும் தொடர்கிறார்.
கூட்டரசுப் பிரதேச மஇகாவில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கூட்டரசுப் பிரதேச கிளைத் தலைவர்கள் அடுத்த கட்சித் தேர்தல் வரை இப்புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தினார்.