காற்றே ஜெய் தயாரிப்பில் ‘அலாரிப் பூவே நீயே’ இசை திரைப்படத்தின் டிரெய்லர் & டீசர் வெளியீடு!

69

கோலாலம்பூர், ஏப்.17-

வளர்ந்து வரும் இளம் இயக்குநரான காற்றே ஜெய் தயாரிப்பில் ‘அலாரிப் பூவே நீயே’ எனும் இசை திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் டீசர் அண்மையில் தலைநகரில் வெளியீடு கண்டது.

சுகன்யா மற்றும் கேகே கண்ணா குரலில் ஒலிக்கும் இப்பாடல் நல்ல படக் காட்சிகளைக் கொண்டு அழகுற தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இசைத் திரைப்படம் பாடலோடு நல்ல கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று காற்றே ஜெய் குறிப்பிட்டார்.

இது நல்ல ஒரு கதை அம்சத்தைக் கொண்டிருப்பதோடு இந்த இசைத் திரைப்படத்தைக் காண்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நல்ல ஒரு கதைக் கருவைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் கதாநாயகனுமான காற்றே ஜெய் விவரித்தார்.

இதில் இவருக்கு ஜோடியாக தேவகன்னி நடித்துள்ளார்.

விரைவில் அறிமுக வெளியீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தைக் காண்பவர்கள் நிச்சயம் கண்ணீரோடுதான் திரையரங்கத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

இதன் அறிமுக வெளியீடு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இசை திரைப்படத்தை பிரபல உள்ளூர் கலைஞரான ஜஸ்மின் மைக்கலுக்குத் தாம் சமர்ப்பணம் செய்வதாகவும் காற்றே ஜெய் சொன்னார்.