கோலகுபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வீர்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து

57

கோல குபு பாரு, ஏப்.25-

வரும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த ம.இ.கா.வின் தேர்தல் இயந்திரம் முழு வீச்சில் களமிறங்க வேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தின் நலன் மற்றும் விவகாரங்களை மையப்படுத்துவதற்காகவே இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ம.இ.கா.வும் களமிறங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

“இதன் அடிப்படையில் பி.கே.ஆர். மற்றும் ஜ.செ.க.வுடன் இணைந்து பக்காத்தான் வேட்பாளருக்கு ம.இ.கா. உறுப்பினர்கள் அனைவரும் கோல குபு பாருவில் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கோல குபு பாரு ம.இ.கா. நடவடிக்கை அறை திறப்பு விழாவில் உரையாற்றிய போது விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

-மலேசியா கினி