கோல குபு பாரு இடைத்தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக கைருல் அஸாஹாரி போட்டி!

62

பத்தாங் காலி, ஏப்.26-
விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக கைருல் அஸாஹாரியை அக்கட்சி தேர்வு செய்துள்ளது.

இத்தகவலை பெரிக்காத்தான் நேஷனல் தேசிய தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்தார்.

கைருல் அஸாஹாரி பெர்சத்து உலு சிலாங்கூர் தொகுதியின் இடைக்கால தலைவர் ஆவார். இவரை இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராகத் தாங்கள் அறிவிப்பதாக டான்ஸ்ரீ முகைதீன் குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசியாக இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடுவதற்குச் சரியான வேட்பாளர் இவரே என அண்மையில் நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.