இந்தியர்களின் ஆதரவு பெருகியுள்ளது மனநிறைவை தருகிறது! -கவுன்சிலர் புவனேஸ்வரன்

60

கோல குபு பாரு மே 12-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்கள் வழங்கிய ஆதரவு மனநிறைவைத் தருவதாக உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து கூறினார்.

கடந்தாண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேர்தலில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் 60 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்தனர்.

அதே வேளையில், நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு 70.2 விழுக்காடு இந்தியர்கள் வாக்களித்திருப்பதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் புவனேஸ்வரன் பேசினார்.

இத்தேர்தலில் சீனர்கள் ஆதரவு 85 விழுக்காட்டிலிருந்து 88 விழுக்காடாகவும் , மலாய்க்காரர்களின் ஆதரவு 39லிருந்து 42 விழுக்காடாகவும் பூர்வீகக் குடிமக்களின் ஆதரவு 60லிருந்து 63 விழுக்காடாகவும் உயர்ந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.