தகவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக ஜூலியானா ஜோஹான் நியமனம்!

74

புத்ராஜெயா, மே 13-

மலேசிய தகவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக ஜூலியானா ஜோஹான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் இப்புதிய பதவி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தகவல் துறையின் 19ஆவது தலைமை இயக்குநராக ஜுலியானா நியமிக்கப்பட்டுள்ள ஜூலியானா,  1945ஆம் ஆண்டு இத்துறை தோற்றுக்கப்பட்டது முதல் 2ஆவது பெண் தலைமை இயக்குநராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூரில் பிறந்தவரான ஜூலியானா, (வயது 53) கடந்தாண்டில் இத்துறையின் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான துணைத் தலைமை இயக்குநராகப் பதவி வகித்தார்.

யூபிஎம் பல்கலைக்கழகத்தில் பெருநிறுவன தொடர்பு துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்கும் இவர், கடந்த 1996ஆம் ஆண்டில் பொதுச்சேவை ஊழியராகத் தமது பணியைத் தொடங்கி அரசாங்க மக்கள் தொடர்பு மற்றும் வியூகத் தொடர்பு ஆகியவற்றில் பணியாற்றி பரந்த அனுபவங்களைக் கொண்டுள்ளார்.

இவர் கல்வி அமைச்சு, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு, கூட்டரசுப் பிரதேச அமைச்சு, நிதி அமைச்சு, பிரதமர் துறை ஆகியவற்றிலும் சேவையாற்றியுள்ளார்

இந்த அனுபவங்கள், அறிவு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம் தகவல் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு வித்திடுவார் என்று நம்பப்படுவதாக ஓர் அறிக்கையில் அத்துறை குறிப்பிட்டது.  

-பெரித்தா ஹாரியான்