திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புதுடெல்லி:

தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி ஓய்வு பெற்றதையடுத்து, மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓராண்டுக்கும் மேலாக தமிழக பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசுத்தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித், பீகார் மாநில கவர்னராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில கவர்னராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் முன்னதாக மேகாலயா மாநில கவர்னராக பணியாற்றி வந்தப்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன