வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எங்களை ஏமாற்றி விட்டது நம்பிக்கைக் கூட்டணி! பிஎஸ்எம் குற்றச்சாட்டு
முதன்மைச் செய்திகள்

எங்களை ஏமாற்றி விட்டது நம்பிக்கைக் கூட்டணி! பிஎஸ்எம் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப். 30- 
பி.எஸ்.எம். கட்சியை தங்களது கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நம்பிக்கை கூட்டணி இதுநாள் வரையில் பொய் வாக்குறுதியை அளித்து வந்ததாக பி.எஸ்.எம். கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் குற்றம் சாட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணி எங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் கூறினார். பி.எஸ்.எம். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது எல்லாமே சுத்த பொய். இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை கூட்டணி எங்களை அழைக்கவே இல்லை. கடந்த 2008ஆம் ஆண்டு மக்கள் கூட்டணியில் சேர்ந்துக் கொள்ளும்படி எங்களுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. பி.எஸ்.எம். ஏன் நம்பிக்கைக் கூட்டணியில் சேரவில்லை என்று அதன் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். நாங்களும் மக்கள் கூட்டணியில் சேருவதற்கு மனு செய்தோம்.

தொகுதி பங்கீடுகள் தொடர்பில் கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு கடிதங்களை எழுதி விட்டோம். நாங்கள் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட விரும்புகிறோம். ஆனால், அவர்கள் இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை. கடந்த 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஜிங்கா புத்தகம் குறித்து எதிர்க்கட்சியிடமிருந்து தாங்கள் ஒரு கடிதத்தை மட்டுமே பெற்றோம் என அருட்செல்வம் குறிப்பிட்டார்.

நீங்கள் அந்த புத்தகத்தை ஆதரித்தீர்களா என்று அவரிடம் கேட்டபோது, நாங்கள் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை ஏற்றுக் கொண்டோம். அதன் பின்னர், மக்கள் கூட்டணி காணாமால் போய்விட்டது. இதனால்தான், வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் சுயமாகத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து விட்டோம். தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணியை எதிர்த்து நாங்கள் போட்டியிடுவோம். வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தாங்கள் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலுசிலாங்கூர், சுபாங், உலுலாங்காட் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், கோத்தா டாமான்சாரா, செமினி, ஸ்ரீமூடா, போர்ட்கிள்ளான் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி போட்டியிடும் என்றும்அருட்செல்வம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன