செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > கெட்கோ விவகாரம்: முழுமையான விளக்கத்தை எம்ஏசிசிக்கு வழங்கியிருக்கின்றோம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரம்: முழுமையான விளக்கத்தை எம்ஏசிசிக்கு வழங்கியிருக்கின்றோம்!

கோலாலம்பூர், அக்.1-

கெட்கோ நிலம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பில் நாங்கள் முழுமையான விளக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி) வழங்கியிருக்கின்றோம் என லோட்டஸ் குழுமத்தின் இயக்குநர் டத்தோ ரெனா.ராமலிங்கம் இன்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் எம்ஏசிசி அதிகாரிகளுக்கு  தேவைப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கின்றோம்.அவர்களின் கேள்விகளுக்கு மிக தெளிவான விளக்கத்தையும் அளித்திருக்கின்றோம் என அவர் மேலும் சொன்னார்.

இந்த விளக்கம் மனநிறைவாக இருந்த காரணத்தினால் இவரும் லோட்டஸ் குழும நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா.துரை சிங்கமும்  பிணையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர். இவர்களுடைய தடுப்புக் காவல் நாளை திங்கள்கிழமை வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் முன்கூட்டியே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கெட்கோ நிலம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களையும் மிகத் தெளிவான முறையில் அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கின்றோம். இந்த நில கொள்முதல் தொடர்பில் மக்களுக்கு உண்மையான நிலவரம் தெரியவேண்டும் என்பதற்காக விரிவான விளக்கத்தை எம்ஏசிசி அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கின்றோம் என்று டத்தோ ரெனா. ராமலிங்கம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் எம்ஏசிசி அதிகாரிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிருபர்கள் சந்திப்பில் டத்தோ ரெனா துரைசிங்கமும் உடன் இருந்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன