அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஜோங் நாம் கொலை வழக்கு: இணையத்தள ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜோங் நாம் கொலை வழக்கு: இணையத்தள ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

ஷா ஆலம், அக்.2-

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜொங் நாம் கொலை வழக்கின் விசாரணை இன்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. இவ்வழக்கில் தகவல் சேகரிக்க சென்ற உள்ளூரை சேர்ந்த பல இணையத்தள பதிவேடுகளுக்கு அமலாக்க தரப்பினர் அனுமதி வழங்கவில்லை.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, உள்ளூரைச் சேர்ந்த நாளேடுகள், அனுமதி வழங்கப்பட்ட ஒரு சில அனைத்துலக செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட ஜோங் நாம் கொலை வழக்கில் இன்று இந்தோனிசியாவை சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 25), வியட்நாமை சேர்ந்த டோஅன் தி ஹூவோங் (வயது 28) ஆகிய இருவரின் மீது குற்றவியல் சட்டவிதி செக்‌ஷன் 302இன் கீழ் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் அனைத்துலக ஊடகங்களான ஏ.எ.பி, ஏ.பி,க்யோடோ, ரீயூட்டர்ஸ் ஆகியவற்ற்க்கு மட்டுமே செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் இதற்கு முன்னர் இவ்வழக்கின் முழு விசாரணையில் செய்தி சேகரிக்க பெர்னாமாவிற்கு இயல்பாகவே முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியிருந்தது. ஆயினும். இதர ஊடக நிறுவனங்கள் முன்கூட்டியே வரும்படி உத்தரவிடப்படிருந்தது.

இதனால், இணையத்தள ஊடகங்கள் பல செய்திகள் சேகரிப்பதற்காக காலை மணி 5.30 அளவில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தினுள் நுழைய மறுக்கப்பட்டனர்.

அங்கு ஊடகங்கள் பதிவை மேற்கொண்டிருந்த பொறுப்பாளர்கள் பட்டியலிடப்பட்ட ஊடகங்களை மட்டுமே நீதிமன்றத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருக்க வைக்கப்பட்ட இணையத்தள ஊடகவியலாளர்கள் கடுப்பானதோடு போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். எனினும், அதிகாரபூர்வமற்ற பட்டியலின் அடிப்படையில் நாங்கள் ஊடக அனுமதி அட்டையை வழங்க முடியாது. அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும் என போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறியதாக இணையத்தள ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, குற்றம் சாட்டபட்ட அந்த இரண்டு பெண்களும் காலை மணி 8.00 அளவில் 5 போலீஸ் வாகன பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இவ்வழக்கு நீதிபதி டத்தோ அஸ்மி அரிப்ஃபின் தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று அவ்விருவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும். இவ்வழக்கின் முழுவதிலும் சுமார் 40 சாட்சியாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன