அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரசிகர்கள் இல்லாத அரங்கில் வெற்றியைப் பதித்த பார்சிலோனா
விளையாட்டு

ரசிகர்கள் இல்லாத அரங்கில் வெற்றியைப் பதித்த பார்சிலோனா

பார்சிலோனா, அக்.2 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா 3 – 0 என்ற கோல்களில் லாஸ் பல்மாஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் ரசிகர்கள் வருகையின்றி, மூடப்பட்ட நூ கேம்ப் அரங்கில் நடைபெற்றது.

ஸ்பெயினில் காத்தோலோனிய மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது குறித்து நடத்தப்பட்ட வாக்குப் பதிவு சட்ட விரோதமானது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தை அடுத்து அம்மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல வாக்கு சாவடிகளை காவல்துறை மூடியதை அடுத்து பார்சிலோனாவின் லீக் ஆட்டம் தள்ளி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.எ

னினும் ஆட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் இல்லாமல் நூ கேம்ப் அரங்கில் ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நான்கு நிமிடங்களில் செர்ஜியோ புஸ்கேட்ஸ் பார்சிலோனாவின் முதல் கோலை அடித்தார்.

70 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் புகுத்திய லியோனெல் மெஸ்சி, 77 ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு அந்த அணியின் வெற்றியை உறுதிச் செய்தார். இந்த வெற்றியின் வழி இதுவரை நடைபெற்ற ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள பார்சிலோனா 21 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதிச் செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன