ஆண்டு இறுதிக்கான சிறப்புச் சலுகை: ஏர் ஆசியா அறிவிப்பு!

0
6

கோலாலம்பூர், அக். 2-

கோலாலம்பூரிலிருந்து பினாங்கு, சிஹானோக் வில்லி (Sihanoukville), லுவாங் பிரபாங் (Luang Prabang), பட்டாயா (Pattaya), சந்தாவ் (Shantou), கலிபோ (Boracay) மற்றும் விசாகபட்டிணம் ஆகிய இடங்களுக்கு வெ.39 சலுகைக் கட்டணத்தை மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

இதில் கூச்சிங்கிலிருந்து லங்காவி, பொந்தியானாக் (Pontianak) செல்லும் பயணிகளுக்கு வெ.79 தொடங்கி பயணம் செய்யும் வேளையில் ஜோகூர்பாருவில் இருந்து மக்காவு (Macau), கொல்கத்தாவுக்கு (Kolkata) செல்பவர்களுக்கு வெ.169 கட்டணம் விதிக்கப்படுகிறது என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

கோலாலம்பூரிலிருந்து பெர்த், தைப்பே, ஷாங்ஹாய் உட்பட ஆசியா, அமெரிக்கா, நியூசிலாந்து, மத்தியக் கிழக்கு ஆகியவற்றிலுள்ள இன்னும் 120 சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ஏர் ஆசியா எக்ஸ் பயணிகளுக்கு வெ.279 முதல் சிறப்புச் சலுகைக் கட்டணம் விதிக்கப்படும். இந்த சலுகையின் கீழ் ஏர் ஆசியா எக்ஸ் பிரிமியம் பிலாட்பெட்டில் வெ.699 தொடங்கி கோலாலம்பூரிலிருந்து பெர்த், தைப்பே உட்பட இன்னும் சில இடங்களுக்கான பயணமும் சலுகை கட்டணத்தில் அந்நிறுவனம் வழங்குகின்றது.

இந்த சலுகைத் திட்டம் வருகின்ற 15ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு உட்பட்டதாகும். இதில் 20 கிலோ பயணப் பை (baggage) உட்பட உணவு, தரமான அமருமிடம், காப்புறுதி பாதுகாப்பு, பயணப் பை தாமதத்திற்கான பாதுகாப்பு ஆகியவையும் வழங்கப்படும் என்று ஏர் ஆசியா நிறுவனம் அறிவித்தது.