புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > இந்துக்கள் பண்டிகைகள் அர்த்தங்கள் பொதிந்தவை! -டாக்டர் சுப்ரா
மற்றவைமுதன்மைச் செய்திகள்

இந்துக்கள் பண்டிகைகள் அர்த்தங்கள் பொதிந்தவை! -டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், அக். 2-

இந்துக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் அர்த்தங்கள் பொதிந்தவையாகும். அந்த வகையில் நவராத்திரி பண்டிகை மாணவர்களுக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்துவதோடு அவர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளதாக  ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில் லிம் கோ தோங் மண்டபத்தில் இந்திய மாணவர்களுக்கான ‘பக்தி சக்தி’ எனும் மாபெரும் சூரசம்ஹார சிறப்புக் கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

இந்த கருத்தரங்கில் படிவம் நான்கு மற்றும் படிவம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமானால், மாணவர்களான உங்களுக்குக் கல்வி மீது ஆழமான “பக்தி” இருக்க வேண்டும். அதோடு, கடுமையான உழைப்பும், விடா முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் “சக்தி” உங்களுக்கு உறுதுணையாக இருந்து அருள் பாலிப்பார். வாழ்க்கை என்பது ஒரு வட்டத்திற்குள் உள்ளடக்கியது என டாக்டர் சுப்பிரமணியம் மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.

மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வும் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று இந்த கருத்தரங்கில் வழங்கப்படும் தேர்வு யுக்திகளும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நான் கருதுகிறேன். எனவே, மாணவர்கள் மீதமுள்ள நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றிப் பெற தாம் இறைவனிடம் வேண்டுவதாக டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன