திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > புற்று நோய்க்கு பாரம்பரிய மருத்துவத்துவ முறை குறித்து ஆய்வு! -டாக்டர் சுப்ரா
மற்றவைமுதன்மைச் செய்திகள்

புற்று நோய்க்கு பாரம்பரிய மருத்துவத்துவ முறை குறித்து ஆய்வு! -டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், அக். 2-

நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சம் (100,000) பெண்கள் பல்வேறு வகையான புற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே நோய் குறித்து முன்னதாக மேற்கொண்ட சோதனைகளின் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர். எஞ்சிய 60 விழுக்காட்டினர் நோய் கண்ட பிறகு அவர்களுக்கு இறுதி நேரத்தில் தெரிய வருவதால் அவர்கள் அதிக சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்  என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

“மலேசியாவில் பெண்களைப் பாதிக்கும் மார்பகப் புற்று நோய்க்கு அடுத்த நிலையில் கர்ப்பப்பை புற்று நோய் உள்ளது. சில வகையான புற்று நோய்கள் தொடக்கத்திலேயே அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால் அவற்றை முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே, பெண்கள் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்” என டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், டபுள் ட்ரீ தங்கும் விடுதியில் புற்று நோய் தொடர்பான தேசிய நிலையிலான மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது டாக்டர் சுப்ரா இதனைத் தெரிவித்தார். “தற்போது, இந்தியா, சீனா போன்ற நாடுகள் புற்று நோய்க்கு நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவத்தையும் பயன்படுத்தி வருகின்றன. மலேசியாவில் அம்முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் முழுமையான ஆய்வு நடத்தப்படுவது அவசியம்” என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் உள்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன