கோலாலம்பூர். ஏப். 22-
பிகேஆர் இணை தோற்றுனர்களில் ஒருவரும் இக்கட்சியின் உதவி தலைவருமான நூருல் இஸா அன்வார் ‘புரோஜெக் சிண்டிகெட் ஃபாவட் திங்கர்ஸ் லிஸ்ட் ‘எனும் திட்டத்தில் இடம் பெற்றுள்ள 30 செல்வாக்கு மிக்க தனி நபர்களின் பட்டியலில் அடங்கியுள்ளார்.
‘புரோஜெக் சிண்டிகெட் ஃபாவர்ட் திங்கர்ஸ் லிஸ்ட் ‘என்பது லாபத்தை அடிப்படையாகக் கொள்ளாத உலக ஊடக அமைப்பாகும்.
கல்வி, கொள்கை வரைவு, சமூகம்,தனியார் துறை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அறிவார்ந்த தரப்பினரை அங்கீகரிப்பதற்கும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திற்காகவும் முன்னெடுக்கப்பட்ட திட்டமே இது என்று தனது சமூக வலைத்தளத்தில் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அரசியல் விவாதங்களில் ஆக்கபூர்வ சிந்தனைகளை தூண்டக்கூடிய ஆற்றல்மிக்கவர்களை இந்த ஊடகத்தின் ஆசிரியரே இறுதியில் தேர்வு செய்வார் என்று இந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.
-பெர்னாமா