கோலாலம்பூர், ஏப். 24-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களில் ஏ+, ஏ, ஏ- மதிப்பெண்கள் பெற்றனர்.

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ, ஏ-மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு 11,713 மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ, ஏ- மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேசிய சராசரி புள்ளி விழுக்காடு இவ்வாண்டு 4.49விழுக்காட்டிற்கு உயர்ந்திருப்பதாக கல்வி துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் குறிப்பிட்டார் .

அதே வேளையில், அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது சி மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளது. இவ்வாண்டு 86,040 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது சி மதிப்பெண் பெற்றனர்.

குறைந்தபட்சம் இ மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 136,791 ஆக அதிகரித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.