பெட்டாலிங் ஜெயா, மே-1-“டூரிஸ்ட் ஃபாமிலி” குடும்பத்தோடு பார்க்க வேண்டிய தரமான படம். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை என்கிறார் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

நேற்று இங்குள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரையரங்கில் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் கண்டு களித்த பின்னர் இக்கருத்துகளைப் பதிவிட்டார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

அதே நேரத்தில், ஆழமான கதை. காதல், கருணை, குடும்பம் என நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தோடு சிரித்து மகிழக்கூடிய படம் என்றும் அவர் விவரித்தார்.

அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்று அவர் மேலும் சொன்னார்.