ஷா ஆலம், மே 3- எஸ்பிஎம் தேர்வில் முடிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறிப்பாக சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமையைத் தேடித் தந்த இந்த மாணவர்களுக்கு சுரேந்திரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதில் எந்தவொரு மாணவரும் விடுபடக்கூடாது.காரணம் கடந்த காலங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு மறுக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதே நிலை இந்த ஆண்டும் தொடரக் கூடாது. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். காரணம் இது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விவகாரம் ஆகும் என்றார்.

அதே சமயம், சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.