காஜாங், மே 4-இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி இதுவரை  40,000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தைச் சாரும் .

பேராசிரியர் டாக்டர் எம் தம்பிராஜா சிந்தனையில் உருவான ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது நாடு தழுவிய அளவில் கல்வி மையங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் கோவிட் 19  தொற்று நோய் காலத்தில் தடைபட்டுப் போன காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இப்போது மீண்டும் சிறப்பாக இயங்கி வருகிறது.

எஸ்எம்சி காஜாங் கல்வி நிலையத்தை உமா தேவி கோவிந்தன்  , கனகராஜா நடராஜா மற்றும் மாயா ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  6 ஆம் ஆண்டு, படிவம்1, படிவம்2, படிவம் 3,  படிவம் 4 மற்றும் படிவம் 5 வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிலையத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

காஜாங், செமினி பாங்கி, ரிஞ்சிங், வெஸ்ட் கன்றி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்திய மாணவர்கள் இந்த கல்வி நிலையத்தில் பயிலலாம் என்று உமாதேவி கோவிந்தன் தெரிவித்தார்.

இதனிடையே, காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு வருகை தந்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உரையாற்றினார்.

காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காலடி எடுத்து வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

இந்த கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் அனைவரையும் அவர் பாராட்டி மகிழ்ந்தார்.

காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் 019-3923177 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.