சிரம்பான், மே 8-பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா போட்டியிட்டால்  அவருக்கு ஆதரவு வழங்குவதாக நெகிரி செம்பிலான்  பிகேஆர் கட்சித் தொகுதி தலைவர்கள் அறுவர் அறிவித்துள்ளனர்.

ரெம்பாவ், ஜெலுபு, சிரம்பான், ராசா, கோலப்பிலா, தம்பின் ஆகிய ஆறு தொகுகளின் பிகேஆர் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

கட்சியை வலுப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்த அமைச்சர் பதவி வகிக்காத ஒருவர் கட்சிக்குத் தேவை என்று அவர்கள் தங்களின் கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

கட்சியை வலுப்படுத்துவதற்கான முந்தைய முயற்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவது மிக முக்கியமானது என்று அவர்கள் சுட்டிக் காட்டினர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து நாட்டை வழி நடத்தும் நிலையில் மறுமுனையில் நூருல் இஸா கட்சியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.

பிகேஆர் கட்சியில் பல சவால்மிக்க நேரங்களைச் சந்தித்தப் போது அவற்றை எதிர்கொள்ள நூருல் இஸா முக்கியப் பங்கு வகித்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.