கோலாலம்பூர், மே 10-தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற குரு பெயர்ச்சி பலன்கள் நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஜ் கலந்து கொண்டார்.
அவரிடம் இளைய தமிழவேள் ஆதி குமணன் புத்தகத்தை நூலாசிரியர் பி.மலையாண்டி வழங்கினார்.