கோலப்பிலா , மே 12-இங்குள்ள  ஸ்ரீ கந்தசாமி ஆலய திருப்பணி வேலைகள் இப்போது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆகையால், கோலப்பிலா மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் மற்றும்  முன்பு இங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும்  இந்த ஆலயத்தின் திருப்பணி நிதிக்கு  உதவும்படி நிர்வாகம்  அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

அதே சமயம், கவிமாறன் இந்த ஆலயத் திருப்பணிகள்  பற்றிய செய்திகளை  சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.

மேல் விவரங்களுக்கு  ஆலய தலைவர்  கணேஷூடன்  0126970059 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.