கோலாலம்பூர், மே 13-இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்காக டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியை எதிர்த்து, நூருல் இஸா அன்வார் போட்டியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலையீடு இல்லையென்றும் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
நூருல் இஸா தமது தகப்பனாரின் தூண்டுதலால்தான் போட்டியில் குதித்திருப்பதாகச் சொல்லப்படுவதும் அவர் போட்டியில் தோற்றால் அது அன்வாருக்கே தோல்வி என்றும் ரபிஸி கூறுவதில் அர்த்தம் எதுவுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தாம் போட்டியிலிருந்து விலகியதாக சைபுடின் தெரிவித்தார்.

