புத்ரா ஜெயா, 14- இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசியின் விலை தற்போது டன்னுக்கு 2,600 ரிங்கிட்டாகக் குறைக்கப் பட்டிருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

2024 டிசம்பர் 1ஆம் தேதி அதன் விலை 3,000 ரிங்கிட்டிலிருந்து 2,800 ரிங்கிட்டாகவும் தற்போது அது 2,600 ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .

பச்சை அரிசிக்காக ஒரு நாட்டை மட்டுமே நம்பியிருப்பதை விடுத்து, தற்போது பெர்னாஸ் நிறுவனம் வியட்நாம், தாய்லாந்து மற்றும் மியன்மாரிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கி இருப்பதால் அதன் விலை தற்போது மேலும் குறைக்கப்பட்டிருப்பதாக முகமட் சாபு சுட்டிக் காட்டினார்.