அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பீர் போத்தல் சர்ச்சையில் ஜமால் யூனோஸ் !
முதன்மைச் செய்திகள்

பீர் போத்தல் சர்ச்சையில் ஜமால் யூனோஸ் !

ஷா ஆலாம், அக்.5 – 

சிலாங்கூர் மாநிலத்தில் அவ்வபோது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சிவப்பு சட்டை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், வியாழக்கிழமை சிலாங்கூர் அரசாங்க செயலகத்தின் முன் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

காலை 10.15 மணி அளவில் தமது 20 ஆதரவாளர்களுடன் செயலகத்தின் முன் திரண்ட ஜமால், சிலாங்கூரில் நடைபெறவுள்ள பீர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீர் போத்தல்களை அடங்கிய பெட்டிகளைக் கொண்டு வந்தார்.

செயலகத்தின்  கதவு முன் அந்த பெட்டிகளை அடுக்கு பின்னர் அதனை அடுத்து நொறுக்கிய ஜமால் யூனோஸ், சிலாங்கூர் மாநிலத்தில் எந்த ஒரு பீர் திருவிழாவும் நடைபெறக் கூடாது என எச்சரித்தார்.

எனினும் இந்த சம்பவத்தில் ஜமால் யூனோஸ் கொண்டு வந்த பீர் பெட்டிகளின் அதன் சின்னம் ” பெட்டர் பீர் பெஸ்டிவல் 2017 ” என குறிப்பிடப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த அந்த விழாவுக்கு கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதனையடுத்து  அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திடம் அனுமதி கோரியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற பீர் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ புசி ஹரூன் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தலைநகரில் அந்நிகழ்ச்சியை நடத்த போலீஸ் தடை விதித்துள்ளதாக அவர் சொன்னார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன