கிள்ளான், மே 14-பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமியின் மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதானது அரசியல் பழி வாங்கும் செயலென கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ குற்றஞ்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தூசு தட்டி பதவியிலிருந்து விலகி இருக்கும் இராமசாமியின் மீது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசு சுமத்தியிருப்பது அவருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகும்.ந்தக் குற்றச்சாட்டானது அரசின் நேர்மையை, குறிப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் சார்ல்ஸ் சுட்டிக்காட்டினார்.
முந்தைய ஆட்சியைப் போல தற்போதைய மடானி அரசும் அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்கும் நடவடிக்கைகளைக் கையில் எடுத்திருப்பது அவப் பெயரை ஏற்படுத்துவது திண்ணம் என்றும் அவர் சாடினார்.

