அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ரசிகர்கள் எங்குச் சென்றாலும் என் இசையும் பின் தொடரும் -இளையராஜா பெருமிதம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ரசிகர்கள் எங்குச் சென்றாலும் என் இசையும் பின் தொடரும் -இளையராஜா பெருமிதம்

கோலாலம்பூர், அக் 5-

ரசிகர்கள் எங்கே சென்றாலும் என் இசையும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லும். வாழ்க்கையில், இன்பம், துன்பம், காதல், பிரிவு, தாலாட்டு இவை அனைத்திற்கும் என் பாட்டுதான் பக்கபலமாக இருக்கும் என இசைஞானி இளையராஜா நேற்று தெரிவித்தார்.

மை இவென் இண்டர்நேஷனல் தயாரிப்பில் அக்டோபர் 7 ஆம் தேதி புக்கிட் ஜாலில் அக்ஸிதா அரங்கில் ராஜா ஒன் மேன் ஷோ இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. நேற்று தலைநகரில் உள்ள ரெனைன்சன்ஸ் தங்கும் விடுதியில் இந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.‘ ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எனது பாடல் எதாவது ஒரு வகையில் மக்களை சென்றடைந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது மனநிறைவை அளிக்கிறது. இந்த இசை திறனை இறைவன் எனக்கு அளித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் இது இறைவன் எனக்கு தந்த வரம் எனவும் அவர் கூறினார். மலேசிய ரசிகர்கள் எனது இசையை கேட்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.  இன்னும் 2 நாட்களில் நடைபெறவிருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கக்கூடிய பல அம்சங்கள் உள்ளன. ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அளவிற்கு எனது பாடல்கள் அமையும். ஒரு தாய் தம் பிள்ளைகளுக்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வது போல அனைத்துப் பாடல்களையும் சிறப்பாக தயார் செய்து வைத்திருக்கிறேன். அதற்கான ஒத்திகைகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சிக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது டிக்கெட்டுகளின் விற்பனை விறுவிறுப்பாகவே உள்ளது. கிட்டத்தட்ட 80 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்று முடிந்தாகிவிட்டது. அதேபோல் கடந்த முறை போலவே இந்த முறையும் டிக்கெட்கள் அதே விலையில் விற்கப்படுகின்றன. ரசிகர்கள் முடிந்த வரையில் டிக்கெட்டுகளை விரைவில் வாங்கிக் கொள்ள வேண்டும். புக்கிட் ஜாலில் அக்ஸிதா அரங்கிலும் இந்த டிக்கெட்டுகள் விற்கப்படும் என மை இவென் இண்டர்நேஷனல் உரிமையாளர் ஷாஹுல் அமிட் கேட்டுக் கொண்டார்.

70 இசை கலைஞர்களுடன் சுமார் 5 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கின்றது. ஆசிய மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகம், மாலிக் ஸ்டிரிம் கோர்பரேஷன், சைபர்ஜெயா இண்டர்நேஷ்னல் அறிவியல் மருத்துவ கல்லூரி, மேஸ்ட்ரோ மியூசிக், மலேசிய மேஜர் ஈவேண்ட்ஸ், ஆகியவைகளுடன் மண்ணின் மைந்தர்களின் ஆதரவுடன் இந்த இசை நிகழ்ச்சி நடந்தப்படுகிறது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் மலேசிய மேஜர் ஈவேண்ட்ஸின் தலைமை நிர்வாகி தோம் நாகமையா, சைபர்ஜெயா இண்டர்நேஷ்னல் அறிவியல் மருத்துவ கல்லூரியின் இணை வேந்தர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.பாலன் ஆகியோருடன் மண்ணின் மைந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு முகநூல் பக்கம் Raaja The One Man Show Live in Kuala Lumpur  என்ற பக்கத்தை வலம் வரலாம். www.myticket.asia என்ற இணையத்தளத்தின் வாயிலாகவும் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன