ஜொகூர் பாரு, மே 24-பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நூருல் இஸா அன்வார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

கட்சியின் துணைத் தலைவர் பதவிக்காக நூருல் இஸாவிற்கும் ரஃபிஸி ரம்லிக்கும் இடையே நேற்று நடைபெற்ற நேரடி போட்டியில் நூருல் இஸா 9,803 வாக்குகள் பெற்று வெற்றியாளர் ஆனார்.

நாட்டிலுள்ள 222 பிகேஆர் தொகுதிகளில் 200க்கும் அதிகமான தொகுதிகள் நூருல் இஸாவை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.