ஜொகூர் பாரு, மே 24 – பிகேஆர் கட்சியின் உதவி தலைவருக்கான தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 7,955 வாக்குகளுடன் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.

இவரையடுத்து தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் 5,895 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை வென்றார்.

இவர்களைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் 5,889 வாக்குகளும்  தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லீ காங் 5,757 வாக்குகளும் பெற்று உதவி தலைவர்களாக வெற்றி பெற்றனர்.