புத்ரா ஜெயா, மே 26-ரோன் 95 பெட்ரோலுக்கான உதவி நிதி இவ்வாண்டு மத்தியில் அமலுக்கு வருமென்றும் அதற்கு தகுதியானோரின் அடையாளக் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
உதவி நிதி தேவைப்படுவோருக்கு மட்டுமே அது வழங்கப்படும் என்றும் அது ரஹ்மா உதவித் திட்டத்தை ஒட்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அது பற்றிக் குறிப்பிட்டபோது, அதிக சம்பளம் பெறும் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினருக்கு பெட் ரோலுக்கான உதவி நிதி கிடைக்காது என்று கூறியுள்ளார்.

